பிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை

ஹிந்தி திரையுலக நடிகைகள் மற்றும் இந்திய தொலைக்காட்சி பிரபலங்கள், சுத்தம் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுத்துள்ளனர்.

இந்தியாவின் பொழுதுபோக்கு தலைநகரான வெர்சோவா கடற்கரையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விழிப்புணர்வு செயற்திட்டத்திலேயே மேற்குறித்த பிரபலங்கள் பங்கெடுத்துள்ளனர்.

நடிகைகளான சையாமி ஹேர், அபிகெய்ல் பாண்டே, மற்றும் அனுஸ்கா டாண்டேகர் ஆகியோர் இதில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களாக குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்கள் உள்ளூர் பகுதி மற்றும் மும்பை மக்களோடும், ஏனைய சமூக சேவகர்களோடும் இணைந்து, வெர்சோவா கடற்கரையை சுத்தம் செய்யும் முழு நாள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஈடுபட்டிருந்தவர்கள் நான்கு அடிக்கு கீழே சென்றிருந்த பிளாஸ்டிக் பொருட்களை இனம் கண்டு அகற்றியிருந்தனர்.

கனவு நகரம் என அழைக்கப்படும் மும்பை நகரின் பெயர் சொல்லக்கூடிய சுற்றுலா தளமாக வெர்சோவா கடற்கரை காணப்படுவது மட்டுமல்லாமல், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கும் மிக மோசமான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

அது மட்டுமன்றி மும்பை நகரில் குவியும் கழிவுப்பொருட்களில் 10 வீதமான கழிவுப்பொருட்கள் குறித்த கடற்கரையிலே ஒதுங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவற்றுள் 70 வீதமானவை ‘மலாட்’ எனும் சிற்றோடையிலிருந்து சேர்பவையாகவும், இன்னும் 20 வீதமான கழிவுகள் மழல்நீர் வடிகால்களினூடாக ஒதுங்கப்படுபவையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !