பிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் மேகன்!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் கரம்பிடித்து பிரித்தானிய அரச குடும்பத்தில் இணைந்த அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல், பிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பிரித்தானிய வோக் சஞ்சிகையினால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள 25 பேர் கொண்ட பட்டியலில் மேகனும் இடம்பிடித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து அரசியல்வாதி ரூத் டேவிட்சன், ஃபெஷன் டிசைனர் ஸ்டெல்லா மெக்கார்ட்னி மற்றும் ஹரி பொட்டர் ஆசிரியர் ஜே.கே.ரவ்லிங் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் தற்போது சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலின் பெயருடம் இணைக்கப்பட்டுள்ளது.

கலை, பொழுதுபோக்கு, அறிவியல், ஊடகம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெண்களின் பெயர்களை உள்ளடக்கியதாக இப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !