பிரதம மந்திரி தெரசா மே யின் பிரக்சிற் உடன்படிக்கை நிராகரிக்கப் பட்டது-

பிரதம மந்திரி தெரசா மே இன் பிரக்சிற் உடன்படிக்கை 230 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு இது  வரலாற்று தோல்வி மிகப்பெரிய தோல்வி என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா  வெளியேறுவதற்கான விதிகளை அமைக்கும் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதா அன்றி  நிராகரிப்பதா, என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் 432 வாக்குகள் வாக்களித்தனர்.  இந்த வரலாற்றுத் தோல்வியை அடுத்து தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின்  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  அல்லது அரசாங்கம் பாராளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனக் கொரியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !