பிரதமர் மேயின் உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைக்க இயலாது-கோர்பின்

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைக்க இயலாது என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் நடைபெற்று வரும் காரசாரமான விவாதத்தின் போதே கோர்பின் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் டோரி உறுப்பினர்கள்  NHS  வைத்தியசாலை, வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை, மற்றும் வரி முறைமை தொடர்பான விடயங்களில் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும் கோர்பின் குற்றஞ்சாட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !