பிரதமர் மாளிகையில் பாதுகாப்புப் படைவீரர் தற்கொலை!

ஜனாதிபதியின் குடியரசுப் பாதுகாப்புப் படைவீரர் (garde républicaine) ஒருவர், பிரதமரின் இல்லமான Hôtel de Matignon இல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வீரர் பிரதமர் இல்லத்தின் தோடப்பகுதியில் வைத்து துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், ஜோந்தார்மினரின் கண்காணிப்புத் தலைமையகமான IGGN (inspection générale de la gendarmerie) இடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது  அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !