பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்து
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உங்கள் வெற்றிக்கும் மற்றும் மக்கள் உங்கள் தலைமையை மீண்டும் அங்கீகரித்தமைக்கும் வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் இந்தியாவுடனான நட்புறவு மற்றும் ஆக்கபூர்வமான உறவை தொடர இலங்கை எதிர்நோக்குகிறது.
இந்நிலையில் தேர்தலில் தற்போது முன்னிலையில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான சுமூக உறவை மேலும் தொடர விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.