பிரதமரின் செயலாளர் பதவிநீக்கம்

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அந்த பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 51(1) இலக்க சரத்தின் படி அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக கலுவேவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுப்படி உடனடி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !