பிரதமராகும் ஆசை எனக்கில்லை : அகிலேஷ் யாதவ்

பிரதமராகும் ஆசை எனக்கில்லை. இதனால் பிரதமர் பதவிக்காக ஒருபோதும் போட்டியிடமாட்டேன் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அகிலேஷ் யாதவ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய இந்தியா புதிய பிரதமரின் வருகைக்காக காத்திருக்கின்றதெனவும் மோடியை தவிர, வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளர் பா.ஜ.க நிறுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தேர்தல் நிறைவு பெற்ற பின்னர் எதிர்க்கட்சிகளிடம் எத்தனை பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது தொடர்பில் தெரியவருமெனவும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

ஆனால், நான் பிரதமர் பதவிக்காக ஒருபோதும் போட்டியிட மாட்டேன் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !