Main Menu

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவ மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவை நீக்குவதற்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இரத்த உறைவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமாகியது. அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றதாக மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரலுக்கு சிகிச்சையளிக்கப்படும் அதே சந்தர்ப்பத்தில் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும் மருத்துமனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.