பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடுகடத்த நடவடிக்கை
ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிவுறுத்தலுக்கமைய அவருக்கு எதிராக சர்வதேச காவல்துறை பிடியாணை பிறப்பித்திருந்தது.
அவர் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பிரான்சுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் கனேடிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், டொரோன்டோவில் கைதான குறித்த நபர் செய்த கொலை தொடர்பான விசாரணைகள் அடுத்த வருடம் மே மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...