பிணையில் விடுதலையானார் பேரறிவாளன்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நேற்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். இதற்கமைய அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி புழல் சிறையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன் அங்கிருந்து ஜோலார்போட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...