பிடல் காஸ்ட்ரோ (அஞ்சலி)
ஒரு சர்க்கரை கிண்ணம் கவிழ்ந்து விட்டது
ஒரு வல்லூறின் சிறகடிப்பு ஓய்ந்துவிட்டது
புரட்சியின்இறகொன்றுஉதிர்ந்துவிட்டது
பேரமைதியில்
மானுடத்தினஉரத்தகுரல்ஒன்றுமெளனித்திருக்கிறது
கோடிமனங்களின்மனச்சாட்சி
மீளாதுயில்கொள்கிறது
கொழுந்துவிட்டெரிந்தகாட்டுத்தீ
கனன்றுபோனதோ
இன்றுமுதல்
துப்பாக்கிரவைகளில்
வீரியம்விதைத்தவிரல்கள்
குளிர்ந்திருக்கின்றன
அடிமைத்தனத்தை
வேரறுத்தவிழிகள்
மூடியிருக்கின்றன
சகோதரத்திற்கு
கரும்புவெட்டியகரங்கள்
அசைவற்றிருக்கின்றன
சுதந்திரத்தின்மகத்துவத்தை
கனவுகண்டபெரும்பறவையொன்று
மீளாத்துயில்கொள்ளசென்றதோ
மானுடத்தின்சுயவிடுதலையை
தூக்கிசுமந்ததோள்கள்
காலத்தின்சிலுவையில்
அறையப்பட்டிருக்கிறது
ஆமாம்உயிர்த்தெழுவதற்காகத்தானே
சிலுவையில்அறையப்படுவதே
முளைத்தெழுவதற்காகத்தானே
மண்ணில்புதைக்கப்படுவதே