பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றி

பிக் பஷ் ரி-20 தொடரின், 23ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணியும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஜோர்ஜ் பெய்லி 70 ஓட்டங்களையும், பென் மெக்டர்மோட் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால் அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஆரோன் பின்ஞ் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மெரிடித், போதா, ரோஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !