பா.ஜ.க. உச்சநீதிமன்றின் தீர்ப்பை மதிக்கவில்லை: சித்தராமையா குற்றச்சாட்டு!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றின் தீர்ப்பை பாரதிய ஜனதா மதிக்கவில்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்தின் உப்பள்ளிப் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சபரிமலை கோவிலில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றின் தீர்ப்பை பாரதிய ஜனதாவினர் மதிக்கவில்லை.

மேலும் இராமர்கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றின் தீர்ப்பு வரட்டும் என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அக்கட்சியினர் செயல்படுகிறார்கள்.

நீதிமன்றின் மீது பாரதிய ஜனதாவுக்கு நம்பிக்கை, மரியாதை இல்லை என்பதே இதன் மூலம் தெரிவாகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !