பாஸ்ரியா நகரில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்

பிரான்ஸின் கோர்ஸ் தீவிலுள்ள பாஸ்ரியா நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிதாரியும் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (புதன்கிழமை) வீதியில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது சந்தேகநபர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

காயமடைந்தவர்களுள் மூன்று பெண்களும், ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்றும், இவர் மீது ஏற்கனவே இரு ஆயுத குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும் உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !