“பாவேந்தர் பாரதிதாசன்” – 21.04.2020

தமிழுக்கு அமுதென்று பெயர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என் உயிரே தமிழ் என்று
தமிழைப் பாடிய பாவேந்தரின்
நினைவு நாள் சித்திரைத் திங்கள்21 !
தமிழ் உணர்வும் இன உணர்வும்
சமுதாய உணர்வும் பொங்க
தமிழையே உடலாக உயிராக மதித்து
தமிழோடு வாழ்ந்த பெருமகனார்
புரட்சிக் கனலை மூட்டிய புரட்சியாளர்
தேச விடியலையும் சமூக விடியலையும்
நேசித்த தேசமைந்தர் !
உயிருக்கு நிகராக
இனத்தின் உணர்வாக
தமிழை நேசித்து
மொழிப்பற்றை ஆழமாய் சுவாசித்து
சமூக மாற்றத்தை ஆதரித்த
மறுமலர்ச்சி கவிஞன் !
மூடத்தனத்தில் மூழ்கியவர்களை
புரட்சிப் பாக்களால் மாற்றியமைத்து
கைம்பெண் மறுமணத்தை
ஊக்குவித்த சிந்தனையாளன்
புதுயுகம் மலர்வதற்கு
பூபாளம் பாடிய புரட்சியாளன்
பேனா முனையாலே சாதித்தாரே !
வார்த்தைகளை வாளாகவும்
தமிழ்மொழியைத் தேனாகவும்
காலங்களைக் கம்பீரமாகவும் கடந்து
இன்று வரைக்கும் எல்லோர் மனதிலும்
காலம் கடந்தும் வாழ்கிறார் பாவேந்தர்
பாவேந்தரை நினைத்திடுவோம் நாமும் !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)
பகிரவும்...