பாலியல் புகார்: ரொனால்டோவை மரபணு சோதனைக்கு ஆஜராகுமாறு உத்தரவு

கால்பந்து உலகில் புகழ் பூத்த வீரரான போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள புகார் தொடர்பில், கிறிஸ்டியானோ ரொனால்டோவை மரபணு (டி.என்.ஏ.,) சோதனைக்கு ஆஜராகுமாறு லொஸ் வேகாஸ் பொலிஸ் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து லொஸ் வேகாஸ் பொலிஸ்; தரப்பில் வெளியிட்ட செய்தியில், ‘ரொனால்டோ– காத்ரினா வழக்கில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். ரொனால்டோவை டி.என்.ஏ., சோதனையில் ஈடுபடுத்துவது கட்டாயம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரொனால்டோ வழக்கறிஞர் பீட்டர் கிறிஸ்டியான்சென் கூறுகையில், ”கடந்த 2009ஆம்; ஆண்டு நட்சத்திர விடுதியில் ரொனால்டோ, காத்ரினா இருவரும் ஒப்புக்கொண்டுதான் பழகினார்கள். இதனால், ரொனால்டோவின் மரபணு காத்ரினாவிடம் ஒத்துப்போவதில் வியப்பு இல்லை” என கூறியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள, லொஸ் வேகாஸ் விடுதியில் வைத்து அந்நாட்டு பெண்ணான கேத்ரின் மயோர்கா என்ற 25 வயது பெண்மணியை, பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் கடந்த ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

குறித்த பெரும் பரபரப்பான செய்தியை அவர், ஜேர்மனி நாட்டு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது, தெரிவித்திருந்தார்.

இதன்போது குறித்த பெண், பலமுறை தான் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டார். அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க பெருந் தொகையான பணம் தருவதாகவும் வாக்குறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் கேத்ரின் மயோர்கா வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ரொனால்டோவும், அந்த இளம்பெண்ணும் இந்த பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் முடித்துக்கொள்வது என கடந்த 2010ஆம் ஆண்டு முடிவு செய்தனர்.

இதற்காக அந்த பெண்ணுக்கு, ரொனால்டோ 3,75,000 டொலர்கள் இழப்பீடு வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்த பிரச்சினை மீண்டும் கடந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்தது. ரொனால்டோ மீதான பாலியல் புகாரை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்வது என போடப்பட்ட ஒப்பந்தம் முறைக்கேடானது என அறிவிக்கக்கோரி, அந்த பெண்ணின் சட்டத்தரணிகள்; வழக்கு தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து ரொனால்டோ மீதான பாலியல் புகார் குறித்து அமெரிக்க பொலிஸார், மீண்டும் விசாரணையை தொடங்கினர்.

எனினும், நீண்ட இழுபறியின் பின்னர், இந்த ஆண்டும் நீண்டுள்ள இந்த பிரச்சினை, ரொனால்டோவுக்கு பெரும் தலைவழியாக அமைந்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !