பாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்!

ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார்.

88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம வயது இளைஞரை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக வெளிவந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கடந்த ஆண்டு, ஜூலை மாதம், மக்கேரிக் தமது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக்கொண்டார்.

இதன் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.பாலியல் குற்றங்களுக்காகப் பதவி விலகிய முதல் மதகுரு அவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அத்தகைய குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படும் மக்கேரிக் எவ்வாறு தேவாலயத்தில் உயர் பதவிகளில் பொறுப்பு வகித்தார் என்பது புரியாத புதிராக இருக்கின்றது எனவும் சமூக அரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !