பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!
பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அவருடைய உடலை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகுல் ஆர்யா ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.