பார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நினைவஞ்சலி நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய பார்சிலோனாவின் லா ரம்ப்லா வீதியில் பாதசாரிகள் மீது வானை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதோடு, 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதேதினம், கட்டலோனியாவிலுள்ள கடலோரப் பகுதியில் காரைக் கொண்டு நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். இவ்வாறு பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின.

தாக்குதல் மேற்கொண்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர்

மேலும் அத்தீவிரவாதிகளில் இருவர் இன்னும் அந்நாட்டுச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !