பார்சிலோனா அணியுடன் இணைகிறார் அஜாக்ஸின் இளம் வீரர்!

ஆம்ஸ்டர்டாமின் அஜாக்ஸ் கால்பந்து கழகத்தின் துடிப்பான இளம் வீரர் ஃபெரெங்கி டி ஜொங்-ஐ (Frenkie de Jong) இணைத்துக் கொள்வதற்கான பந்தயத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணி வெற்றிக் கொண்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் பருவகால போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் 98 மில்லியன் அமெரிக்க டொலருக்கு பார்சிலோனாவுடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

21 வயதான ஃபெரெங்கி, பார்சிலோனா கழக அணியுடன் ஐந்து வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடுக்கள வீரர் டி ஜொங்-ஐ இடமாற்றுவது தொடர்பாக அஜாக்ஸ் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டிற்கமைய அவர், பார்சிலோனா அணியுடன் இணைந்துக் கொள்வார் என கழகம் அறிவித்துள்ளது.

பரிஸ் செயின்ட் ஜேர்மன் மற்றும் மன்செஸ்டர் சிட்டி கழகங்களுடனான கடும் போட்டிக்கு மத்தியில் நடுக்கள வீரர் டி ஜொங்-இற்கான பந்தயத்தில் பார்சிலோனா வெற்றி கொண்டுள்ளது.

நெதர்லாந்தின் விலெம் கழக அணியிலிருந்து விலகி டி ஜொங், கடந்த 2015ஆம் ஆண்டு அஜாக்ஸ் கழக அணியில் இணைந்துக் கொண்ட நிலையில், தற்போது பார்சிலோனாவுடன் இணையவுள்ளார்.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன் லீக் போட்டியில் பார்சிலோனா அணி றியல் மட்ரிட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. பார்சிலோனா இரசிகர்களை தன்வசம் ஈர்ப்பதற்கு இப்போட்டியை டி ஜொங் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !