பாரீசில் மாசு கட்டுப்பாட்டை வலியுறுத்தி சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு

பாரீஸ் நகரில் மாசு கட்டுப்பாட்டை வலியுறுத்தி அங்குள்ள சிலைகளுக்கு முகமூடி அணிவித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது. #Paris #Pollution

பாரீசில் மாசு கட்டுப்பாட்டை வலியுறுத்தி சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு
பாரீஸ்:

பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கார்களில் இருந்து வெளியாகும் கடும் புகையினால் காற்றில் மாசு அதிகரித்துள்ளது. அதனால் கடந்த 2013-ம் ஆண்டில், ஐரோப்பிய நாடுகளில் 70 ஆயிரம் குழந்கைள் கருவிலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்.

எனவே, காற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டை வலியுறுத்தி பிரான்சில் நேற்று பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்தது. அப்போது காற்றில் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. பாரீஸ் நகரில் உள்ள சிலைகளுக்கு முகமூடி அணிவித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !