பாரிஸ் Château de Vincennes இல் சாரதி இல்லா பேரூந்து சேவை!

பரிசில் சாரதி இல்லா பேரூந்து சேவை ஒன்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. Château de Vincennes இல் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு Parc Floral வரை செல்கிறது இந்த பேரூந்து.
இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயங்க இருக்கும் சேவை விரைவில் உத்தியோகபூர்வமாக சேவைக்கு வர உள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் முதல்கட்டமாக சாள்-து-கோல் விமான நிலையத்தில் இது வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது இரண்டாவது தடவையாக மீண்டும் இந்த வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமையில்னிருந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இந்த இலவச சேவை இடம்பெற உள்ளது. Château de Vincennes மெற்றோ நிலையத்தில் இருந்து Parc Floral வரை இரண்டு சிறிய ரக பேரூந்து தினமும் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணிவரை இயங்குகிறது. பரிஸ் மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இந்த சேவை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை RATP முதல்வர் Catherine Guillouard, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse ஆகியோர் இணைந்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளனர். இந்த பரீட்சாத்த முயற்சியானது அடுத்த ஆறுமாத காலங்களுக்கு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !