பாரிஸ் வாகன கண்காட்சி – 120 ஆண்டு கால வாகன கண்டுபிடிப்புகள்

உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் வாகனங்களை தயாரித்து வந்த போதும் சில நாடுகளின் உற்பத்திகள் மக்கள் மனதில் உணர்வு பூர்வமாக ஆழமாக பதிந்து விடுகின்றன. அவற்றின் ரகங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஒரு சிலரின் கனவாக அமைந்து விடுகின்றன.

அந்தவகையில், 1898 ஆம் ஆண்டளவில் பாரிஸ், வாகன பொறியியல் துறையின் பட்டுப்பாதையாக திகழ்ந்தது. பல உற்பத்தியாளர்கள் தமது கார்களின் வகைகளை மேம்படுத்தி வந்ததுடன், அவை படிப்படியாக ‘அந்தஸ்தின் சின்னமாக’ மாறிவிட்டன.

அவ்வாறான வாகனங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சிகளுக்கு பெருந்திரளான வாகன விரும்பிகள் படையெடுத்துச் சென்றனர். பலர் அவற்றை என்ன விலையாக இருந்தாலும் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருந்தனர். இன்னும் சிலர் தமது கனவு வாகனங்களை ஸ்பரிசம் செய்து தமது ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டனர்.

இந்தநிலையில், உலகத் தரம் வாய்ந்த வாகனங்களின் புதிய கண்டுபிடிப்புகளை வௌிப்படுத்த பாரிஸின் சிற்றி ஒட்டொமொபைல் கழகம் கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

ஆரம்பகாலம் தொட்டே பல அழகிய வடிவமைப்புகளைக் கொண்ட வாகனங்களை காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்திய அந்த கழகம் தற்போது புதிய வாகனங்களின் வருகையை சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளது.

எல்லா பங்கேற்பு வாகனங்களும் அவற்றின் ரகங்களின் ஊடாக மிகவும் மதிப்புள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

பாரிஸில் Tuileries gardens இல் இடம்பெற்ற முதல் வாகன கண்காட்சியில் சுமார் 140,000 விருந்தினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். குறித்த கண்காட்சி காலப்போக்கில் சுமார் 1.4 மில்லியன் பார்வையாளர்கள் கொண்ட ஒரு சர்வதேச நிகழ்வாக வளர்ந்துள்ளது.

கடந்த 1898 ஆம் ஆண்டு கண்காட்சியில் ரெனால்ட் பிரதர்ஸ் நிறுவனம் தமது முதலாவது காரை விற்பனை செய்திருந்தனர்.

ரெனால்ட் நிறுவனம், ஏனைய தொழில் நிறுவனங்களான Peugeot மற்றும் Citroen ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பிரான்சில் மிகப்பெரிய தொழில் வழங்குனராக வளர்ச்சியடைந்தது. அஇதுதவிர, மேர்ஸிடிஸ் பென்ஸ் மற்றும் ஜக்குவார் போன்ற ரகங்களும் இந்த கண்காட்சியில் முக்கிய இடத்தை பிடித்தன.

சிட்ரோயன் டி.எஸ் 19 என்ற ரகத்தைச் சேர்ந்த கார் பிற்காலத்தில் பிரான்சின் அரச தலைவருக்கான வாகன வகையறாக்களுக்குள் உள்வாங்கப்பட்டது.

இந்தநிலையில், நவீன காலத்திற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட பல வாகனங்களுடன் 120 வது ஆண்டு the Mondial l’Auto கண்காட்சி விரைவில் இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளளனர்.

எதிர்வரும் 4 திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை வாகன கண்காட்சியின் 120 வது பதிப்பு பாரிஸில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரபல வாகன ரகங்களின் புதிய பதிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !