பாரிஸில் இலங்கை தமிழரிடமிருந்து பையை பறித்த இனைஞன் மயங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இலங்கை தமிழரிடமிருந்து பையை பறித்துக்கொண்டு ஓடிய திருடனை அங்கிருந்த மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பாரிஸில் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் சிறிய யாழ்ப்பாணம் என்றழைக்கப்படும் Gare du Nord என்னும் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது மர்ம நபர் ஒருவர் இலங்கை சுற்றுலா பயணியிடமிருந்து பைபை பறித்துக்கொண்டு ஓடிவதை கண்ட அங்கிருந்த மக்கள், திருடனை விரட்டி சென்று பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் பையை திருடிய 26 வயது இனைஞன் மயங்கிய நிலையில் இரத்தத்துடன் சாலை ஓரத்தில் கிடந்ததை கண்டுள்ளனர்.

அவன் உடம்பில் இரண்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தை கண்ட பொலிசார், ஆம்புலன்ஸ் உதவியுடன் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் திருடன் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !