பாரிசுக்கு அண்மித்த பகுதியில் நிர்வாண பூங்கா திறப்பு!

பிரான்ஸ் பல நிர்வாண கடற்கரை மற்றும் நிர்வாண விடுமுறை விடுதிகளை கொண்ட நாடு. எனவே அதன் தலைநகர் பாரிசுக்கு அண்மித்த பகுதியில் நிர்வாண பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

இது பாரீஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள bois de Vincennes  என்ற இடத்தில் இருக்கும் பொது பூங்காவின் ஒரு பகுதியில் 7300m2சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப் பட்டுள்ளது.

இது நிர்வாண விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்டது. இங்கு நிர்வாணமாக வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பூங்காவுக்கு நிர்வாண விரும்பிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜூலியன் கிளாட் பெனகரி ஏப்பி கூறும் போது, அது உண்மையான ஆனந்தம், நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம். இந்த நகரம் திறந்த மனதுடன் இருப்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது அது ஒரு பைத்தியக்காரத்தனம் என அரசியல்வாதி ஒருவர் விமர்சித்தார். இந்த பூங்கா தற்காலிக சோதனை முயற்சியாக அக்டோபர் 15-ந்தேதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !