பாரிசில் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை பதவி விலகக் கோரி gilet jaune அமைப்பினர் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

பாரிசின் டீ லா புரூஸ் பகுதியில் ஒன்று கூடி ஆயிரக்கணக்கானோர் இன்று(சனிக்கிழமை) இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டின் சீர்திருத்த முயற்சிகளை தீவிரமாக முன்னெடுக்க போவதாக மக்ரோன் அறிவித்தார்.

அதேபோல் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அமைச்சர்களை வலியுறுத்தியதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் கிரைவேக்ஸ் கூறினார்.

இந்த நிலையில் மக்ரோனின் இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விலை உயர்வை கண்டித்தும் gilet jaune அமைப்பினர் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த அதிகளவிலான பொலிஸார் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதனையும் கருதில் கொள்ளாத ஆர்ப்பாட்டகாரர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

மக்ரோனின் ஆட்சியை பெரும்பாளனவர்கள் எதிர்பதாக நேற்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !