பாராளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது 2019 பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறது. அத்துடன் ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !