பாராளுமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னையிலுள்ள அதிமுக அலுவலகத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மாலை வந்தார். கூட்டணி பற்றி அதிமுக நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேறி தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், அதிமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !