பாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்?

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

முதலாவதாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் தான் நடந்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.  அதுமட்டுமின்றி இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்ப நிலை தொடர்பில் அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவோருக்கு ஆட்சி வழங்கப்படும் என்றும் நாடு இன்னும் ஓரிரு தினங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாக  சந்திப்பில் கலந்துனொண்ட தரப்புகளிடம் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் இதன்போது மற்றுமொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் அந்த விடயம்  தற்போது பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது வாய்மூல வாக்கெடுப்பு முறைமையின் ஊடாக பெறப்பட்ட தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை மற்றுமொரு நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறும் என, ஜனாதிபதி சிறிசேனவின் சந்திப்பின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை பாராளுமன்றத்தை இடைநிறுத்த போவதில்லை என உறுதியளித்துள்ள ஜனாதிபதி ஐக்கியதேசிய முன்னணியின் பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாளைளய அமர்வில், இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின் போது, மகிந்த தரப்பினர் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டால் வாய்மூல வாக்களிப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி உடன்பட்டதாக, ஜனாதிபதியுடனான  இன்றைய சந்திப்பின் பின் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !