பாரதிதாசன் மகன் மன்னர் மன்னனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 90 வயது நிரம்பிய இவர் முதுமை சார்ந்த நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இன்று அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழறிஞரான மன்னர் மன்னன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில், தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் பல புதுமையான நாடகங்களை வழங்கியிருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில் புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !