பாப்பரசரின் வடகொரிய விஜயம் உறுதி – தென்கொரியா

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் வசந்தகாலத்தில் வடகொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தென்கொரியாவின் ஆளுங்கட்சித்தலைவர் லீ ஹயி சான் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் குடியரசுக் கட்சித் தலைவர் லீ ஹயி சான், இன்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்தமாதம் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னின் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்ட போது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் விருப்பம் பற்றி வத்திக்கானுக்கு அறிவித்ததாக தென்கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வடகொரியாவிற்கான பரிசுத்தப் பாப்பரசரின் வருகையை அந்நாட்டுத் தலைவர் கிம் மிகவும் விரும்புவதோடு குறித்த விருப்பத்தினை தென்கொரிய ஜனாதிபதியிடமும் உரைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதனை நிறைவேற்றும் முயற்சியில் மூன் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !