பாத வெடிப்பு உங்கள் அழகை குறைக்கின்றதா?

பாதங்களில் குதிகால் பகுதிகளில் ஏற்படும் வீரல்கள் தான் பாத வெடிப்பு.  இது இயற்கைதான். பாதமானது நமது முழு உடல் சுமையையும் தாங்கிக் கொண்டு நடக்கின்றது.  நாம் நடப்பதற்கு பயன்படுத்தும் சாலைகள் மற்றம் செருப்புகள் தினமும் நம் பாதங்களை உரசுகின்றது.  செருப்பு தேய்ந்து போகின்ற மாதிரி பாதமும் தேய்ந்து போனால் நம் கதி என்ன?  இதனால் தான் பாதம் தினம் தோறும் தேய்மானத்திற்கு ஏற்றவாறு வளருகின்றது.

அவ்வாறு தேய்ந்து போன இறந்த திசுக்கள் காய்ந்து வெடித்துவிடுகின்றது.  பின் நம் கையாலோ அல்லது தானாகவோ இறந்த தசைகள் வெளியேற்றப்படும்.   இந்த பாத வெடிப்பு நிகழ வெப்பம், தூசு, அழுக்கு, பித்தம் போன்றவைகளும் காரணம்.  எந்நேரமும் பாதத்தை ஈரப்பதமாகவும் அதே சமயம் சற்று உலர்வாகவும் வைத்துக்கொண்டால் வெடிப்புகள் தோன்றாது.

அப்படி தோன்றிவிட்டாலும் அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.  தன் முகம், உடல் மட்டுமல்ல அனைத்து அங்களும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணமுடையவர்கள் பாதவெடிப்பு பற்றி கவலைப்படுவார்கள்.  அவர்களுக்காக இந்த ஆலோசனைகள்.

1. வாரம் இருமுறை காலை சுத்தமாக கழுவிவிட்டு ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்து பின் அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு வெது வெதுப்பாக  ஆறிய உடன் பாதத்தை அதனுள் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் பாதத்தில் உள்ள கிருமிகள் அனைத்தும் இறந்துவிடும்.  பாதம் குழந்தை பாதம் போல் மாறிவிடும்.

2. தேர்ந்தெடுக்கும் காலணியானது மென்மையாகவும் பாதம் முழுக்க மறைத்து இருப்பதாகவும் இருந்தால் குதிகால் வெடிப்பு வராது.  ஷூ அணிந்திருப்பவர்களுக்கு பாதவெடிப்புகள் தோன்றுவதில்லை.  இரவில் தூங்கும் போது காலுறை ( ஷாக்ஸ்) அணிவது காலை மிகவும் ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்.

3. வாரம் ஒருமுறை பாதத்தை Nice Emery  கொண்டு ( உப்புக் காகிதம் ) தேய்த்து விடவும்.  இறந்தால் இறந்த செல்கள் அகற்றப்பட்டு பாதம் மிருதுவாக இருக்கும்.

4. இப்போது ஆலயங்களை தவிர அனைத்து இடங்களிலும் காலணி அணிவது சகஜமாகி விட்டது வீட்டில் கூட அக்கு பங்க்சர் செருப்பினை உபயோக படுத்துகின்றனர்.  அதனால் முடிந்த வரை வெறும் கால்களால் நடக்காதீர்கள்.

5. பாதத்தை நன்றாக தேய்த்து குளிக்கவேண்டும்.  பாத்ரூமில் கூட காலணி அணிந்து கொள்ளலாம்.  நன்றாக சுத்தம் செய்த பாதத்தில் தினமும் தே. எண்ணெயை அழுத்தி தேய்க்கவும். பின் சகஜமாக வேலைகளை செய்யவும்.  இது பாதத்திசுக்களுக்கு செழிப்பை தரும்.

6. இரவு தூங்கும் முன் ஆலிவ் எண்ணெயை தொட்டு பாதத்தில் தடவினால் போதுமானது. வெடிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.  பித்த வெடிப்பு நீங்க கொத்தமல்லி தழையை நன்றாக அரைத்து வெடிப்பில் பற்று போடவும்.

7. ஆலிவ் எண்ணெய் கிடைக்காமல் போனால் பரவாயில்லை. தேனை எடுத்து பாத வெடிப்பில் பூசவும்.

8. குளிக்கும் போது பாதத்தில் மஞ்சள் தேய்த்து குளித்தாலும் இறந்த திசுக்கள் அகற்றப்படும்.   மருதோன்றி பாதத்தை சுற்றி வைத்தால் அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !