பாதுகாப்பை கருதியே கேவியட் மனு தாக்கல் செய்தோம்: பாண்டியராஜன்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், அ.தி.மு.க.வின் பாதுகாப்பிற்காகவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன் போது பேசிய அவர், இரு பெரு தொகுதிகளின் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, நாடாளுமன்ற தேர்தலோடு இணைத்து சட்டமன்ற தொகுதி தேர்தல்களை நடத்தினாலும் சரி, தனித்தனியாக நடத்தினாலும் சரி, தமக்கு எந்த பிரச்சினையும் கிடையாதென கூறியுள்ளார்.

மேலும் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அ.தி.மு.க. பலமான அணியாக காணப்படுகிறது. எனவே அடுத்தடுத்து எதிர்கொள்ளும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகவே எா்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராவே உள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !