பாதுகாப்பாக மீட்கப்பட்ட 629 அகதிகள்

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 629 அகதிகளை சர்வதேச தொண்டு நிறுவனமொன்று அவர்களது பொறுப்பில் ஸ்பெயின் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மோல்டோவின் கப்பல் மற்றும் இத்தாலியின் 2 கப்பல்களின் உதவியுடன் ஸ்பெயினுக்கு இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் இந்த அகதிகளை அனுமதிப்பதற்கு இத்தாலி மற்றும் மோல்டோ அரசுகள் மறுத்த போதும் ஒருவாரத்திற்கு முன்பு பதவியேற்ற ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ ஹென்சியூ இவர்களை நாட்டிற்குள் வருவதற்கு அனுமதித்து பாதுகாப்பான துறைமுக வசதிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளமை விசேட அம்சமாகும்

600 அகதிகளுடன் இத்தாலித் துறைமுகம் நோக்கி வந்த ஆளேற்றும் கப்பலொன்றினை இத்தாலி அரசாங்கம் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தமையினால் குறித்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வந்தது

மால்டோ தீவுகளுக்கு அருகாமையில் உள்ள மத்தியதரைக் கடற்பகுதியில் குறித்த கப்பல் நிலைக்கொண்டிருந்ததையடுத்து மால்டோ தீவிடம் குறித்த அகதிகளை அனுமதிக்குமாறு இத்தாலி அரசாங்கம் கோரிய நிலையில் மால்டோ தீவு அரசாங்கமும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.

மேலும் இந்த கப்பலில் 7 கர்ப்பிணித்தாயமார்கள் 11 கைக்குழந்தைகள் மற்றும் 123 சிறுவர்கள் உட்பட 629 அகதிகள் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !