பாதாளக் குழுக்களின் மூலம் நல்லாட்சியின் பலவீனம் வெளியாகியுள்ளது: கோட்டா

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள பாதாளக்குழுக்களின் நடமாட்டமானது நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தையே காண்பிக்கின்றது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிபிலை, மெதகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நாட்டில் மீண்டும் பாதாளக்குழுவின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸாரே ஊடக அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் பயங்கரவாதம் மட்டுமன்றி, பாதாளக்குழுக்களும் ஒழிக்கப்பட்டே காணப்பட்டன.

எனினும், தற்போது இதுபோன்ற குழுக்களின் மீள் வருகையானது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தையே காண்பிக்கின்றது.

குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாளக்குழுக்கள் மற்றும் ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தாத அரசாங்கமானது, அவர்களுக்கு எதிராக செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார், சிறைக்காவலர்களைத்தான் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது மிகவும் பாராதூரமான விடயம் என்பதே எமது கருத்தாகும்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !