பாடலாசிரியாக பிரபுதேவா

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சார்லி சாப்ளின் – 2’ திரைப்படத்திற்காக முதன் முதலில் பாடல் எழுதி பிரபுதேவா தற்போது பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என திரைத்துறையின் பல்வேறு துறைகளிலும் கொடிக்கட்டித் திரியும் பிரபுதேவா தற்போது பாடலாசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

‘சார்லி சாப்ளின் – 2’ திரைப்படத்திற்காக ‘இவள இவள ரொம்ப பிடிச்சிருக்கு’ என்ற பாடலை பிரபுதேவா எழுதியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

‘சார்லி சாப்ளின் – 2’ திரைப்படத்தின் இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரபுதேவா எழுதியுள்ள இப்பாடலை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நாளை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2002ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சார்லி சாப்ளின்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவுடன், நிக்கி கல்ராணி மற்றும் ஆதா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக தோன்றுகின்றனர்.

இத்திரைப்படத்தை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இதற்கு சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !