Main Menu

பிரான்சில் பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கும் நாட்கள் அறிவிப்பு!

மே 11ம் திகதிக்குப் பின்னராகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து, கல்வியமைச்சர் பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கம் என அறிவித்திருந்தார். தற்போது அதற்கான கால அட்டவணையை வழங்கி உள்ளார்.  

மே 11 வாரத்தில் ஆரம்பப் பாடசாலையில் Grandes sections,CP, CM2 ஆகியவை ஆரம்பிக்கும். பாடசாலைகளின் வசதிக்கேற்ப இது மாறுபடலாம். இதிலும் ஒவ்வாரு வகுப்பிலும் மாணவர்கள் பாதி பாதியாகப் பிரிக்கப்படுவார்கள். CP-CE1  ஆகியவை பிராந்தியத் தேவைகளின் படி, அந்தப் பிராந்தியம் கல்வியில் பின்தங்கியோ அல்லது வேறு பிரச்சினைகள் உள்ள இடங்களிலோ மட்டும் சமூகப் புள்ளியின் அடிப்படையில் தொடங்கப்படும். 

மே18 வாரத்தில் மத்திய மற்றும் உயர்கல்விப் பாடசாலைகளில் collège இல் – Sixième, Troisième ஆகியவையும் lLycées யில் Première,Terminale ஆகியவை மட்டும் ஆரம்பிக்கும். Lycée professionnel இல் Ateliers industriels ஆரம்பிக்கும் 

மே 25 வாரத்தில் படிப்படியாக அனைத்து மாணவர்களிற்கும் கல்வி ஆரம்பிக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் அதிகம் 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் இணையம் மூலமான கல்வியிலோ (enseignement à distance), அல்லது études இலோ அல்லது உடற்பயிற்சி மற்றும் விளையாட்டிலோ ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து மாணவர்களிற்கும் ஏதோ ஒரு வகையில் கட்டாயமாகக் கல்வி கற்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares