Main Menu

பாடசாலைகளை மீண்டும் திறக்கத் தவறியமை குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கருத்து

பாடசாலைகளை மீண்டும் திறக்கத் தவறியது விரும்பிச்செய்த செயல் இல்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளதாக சண்டே டெலிகிராப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், செப்டெம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஒரு சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் பாடசாலைகள் பாதுகாப்பாக செயற்பட முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாடசாலைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுவதை உறுதி செய்ய மக்கள் தொடர்பு பிரச்சாரத்திற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உத்தரவிட்டதாக சண்டே டைம்ஸ் இந்த மாதம் செய்தி வெளியிட்டுள்ளது.