பாகிஸ்தான் – சவுதிக்கிடையில் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து!

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

தெற்காசியா மற்றும் சீனாவிற்கான பயணத்தின் ஓர் அங்கமாக, சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

அவரது விஜயத்தை முன்னிட்டு பாகிஸ்தானில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சவுதி இளவரசர் நேற்றிரவு சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசியுள்ளார்.

இதன் போதே இளவரசர் முகமது பின் சல்மான் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

புல்வாமோ தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு பாக்கிஸ்தானே முக்கிய காரணம் என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சவுதி இளவரசரின் பாகிஸ்தான் விஜயம் அமைந்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித சம்பந்தங்கமும் இல்லை என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயம் அபாயகரமானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !