பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் செக்டார் அருகே ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அந்த உளவு விமானம் பாகிஸ்தானை நோக்கி திரும்பிச் சென்று விட்டது. மீண்டும் இந்திய எல்லைக்குள்  வந்த பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற விமானப்படை தாக்குதலுக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3-வது உளவு விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !