பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியுசிலாந்து அணி!

பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள நியுசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி 274 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 348 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

இதனைத் தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி 7 விக்கட்டுக்களை இழந்து 353 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

தொடர்ந்து பதிலுக்கு 280 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரே பெற்று 123 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியுசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்றுக்கு என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !