பாகிஸ்தானில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு 60 பேர் காயம்!

பாகிஸ்தானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் – கிழக்கு மாகாணத்தின் சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது.
இதன்போது, எதிர்த்திசையில் வந்த பயணிகள் ரயில் தவறான பாதையில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது. இதில் பயணிகள் ரயிலின் இயந்திரமும், 3 பெட்டிகளும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உள்ளிட்ட 11 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 60 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.