Main Menu

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,513ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா நோய்த்தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்பு எண்ணிக்கை 224ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இதுவரை 2,337 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும், 60 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதில் பஞ்சாபில் 4,590 பேர், சிந்துவில் 3373, கைபர் பக்துன்க்வாவில் 1453, பலுசிஸ்தானில் 552, கில்கிட்-பால்டிஸ்தானில் 290, இஸ்லாமாபாத்தில் 204 மற்றும் ஆசாத் காஷ்மீரில் 51 பேர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...
0Shares