பல வீடுகளில் கொள்ளை; பொலிசாரை திணற வைத்த நபர் தானாக பொலிசாரிடம் சிக்கியுள்ள சம்பவம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் 30 இடங்களில் கொள்ளையிட்டு பொலிசாரை திணற வைத்த நபர் ஒருவர் தானாக பொலிசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் வசித்து வந்த 24 வயதான நபர் தான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுவிஸில் உள்ள Bulach, Meilen, Uster மற்றும் Zurich ஆகிய 4 நகரங்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

30 வீடுகளில் புகுந்து 94,000 பிராங்க் வரை நபர் திருடியுள்ளார். மேலும், வீடுகளில் 40,000 பிராங்க் மதிப்பிலான சேதங்களையும் அந்த கொள்ளையன் ஏற்படுத்தியார்.

5 மாதங்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்த இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட நபரை கைது செய்ய பொலிசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், Dubendorf நகரில் நபர் ஒருவர் சட்டவிரோதமாக வசித்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நபரை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் அல்பேனியா நாட்டை சேர்ந்தவர் எனவும் சுவிஸில் சட்டவிரோதமாக தங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், நபரின் டி.என்.ஏவை சேகரித்து பரிசோதனை செய்தபோது பொலிசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கொள்ளை நிகழ்ந்த வீடுகளில் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏவும் இவரிடம் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏவும் ஒரே மாதிரியில் இருந்துள்ளது.

நபரை கடுமையாக விசாரணை செய்தபோது, 30 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்டது உண்மை என பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !