பல்வேறு மாவட்டங்களில் 900 ஆயுதங்கள் மீட்பு! – மாபெரும் தேடுதல் வேட்டை

29 வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரும் சோதனை நடவடிக்கையில் 900 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தவிர 50 பேர் வரை காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
நுற்றுக்கும் மேற்பட்ட ரிவோல்வர் துப்பாக்கிகள், 200 அரை தானியங்கி பிஸ்டல் வகை துப்பாக்கிகள், 30 இயந்திர துப்பாக்கிகள், 20  கைத்துபாக்கிகள், ரைபிள் வகை துப்பாக்கிகள் பல, வெடிப்பொருட்கள், டைனமைட்கள் உள்ளிட்ட 900 ஆயுதங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வார திங்கட்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரை கிட்டத்தட்ட நாடு முழுவதும்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளது. ஜோந்தாமினர்களும் குற்றவியல் காவல்துறையின் நரும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். 400 ஜோந்தாமினர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட 50 பேர்களில் ஒருவர் மிக முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதங்களை வாங்கியும் விற்றும் வந்துள்ளார். இந்த ஆயுதங்களில் பல, குற்றவாளிகளுக்கு இடையே பரிமாறப்பட்டு வந்ததாகவும், பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !