பல்கலைக்கழக துப்பாக்கி சூடு – பெற்றோரை சுட்டுக்கொன்றதாக மாணவர் கைது!

அமெரிக்காவில் மவுண்ட் பிளெசன்டில் உள்ள சென்டிரல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சுமார் 23 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். பருவகால விடுமுறைக்கு முன்பு, நேற்று முன்தினம் அங்கு 19 வயது மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில், 2 பேர் பலியானார்கள். பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் இச்சம்பவம் நடந்தது. பலியானவர்கள் இருவருமே மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு இருந்த மாணவ-மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியது ஜேம்ஸ் எரிக் டேவிட் என்ற மாணவர் என்றும், குடும்பத்தகராறு காரணமாக தனது பெற்றோரை அவர் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி சூடு பற்றிய பரபரப்பு தணிந்தது. இதுகுறித்து மாணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புளோரிடா மாகாணத்தில் 3 வாரத்திற்கு முன்பு பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !