பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது! – ஸ்பெயின் நாட்டு பெண்மணியும் பலி!

இன்று காலை பரிசில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
தனது கணவருடன் விடுமுறைக்கு பரிசுக்கு வருகை தந்திருந்த  ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவரே இந்த எரிவாயு வெடிப்பில் சிக்குண்டு பலியாகியுள்ளார். விபத்தில் சிக்குண்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த பெண் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஸ்பெயின் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தில் மொத்தமாக 37 பேர் காயமடைந்திருந்தனர். அவர்களில் 10 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்குட்படுத்தபப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !