Main Menu

பலியான ஊடகவியலாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – பாப்பரசர்!

உலகளாவிய ரீதியாக கடமையில் ஈடுபட்டிருந்த வேளை பலியான ஊடகவியலாளர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தாலியில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களின் மனோ நிலையை பாதிக்கும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் தமது உரையில் கடந்த வருடம் ரொஹிங்கியா சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபகரமான சம்பவங்கள், அதன் போது ஊடகவியலாளர்கள் அச்சமின்றி மேற்கொண்ட விடயங்கள் குறித்து கோடிட்டு காட்டினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இத்தாலிய வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பட்ரீஷியா தோமஸ் கடமை நேரத்தில் கொல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட, காயமடைந்த, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து, குறிப்பாக அவர்களினால் பிடிக்கப்பட்ட மாற்று கொள்கையுடையவர்களை சிரசேதம் செய்வது, பின்னர் அதனை காணொளிகளில் வெளி உலகத்திற்கு காட்டப்படுவது குறித்து அவர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் நாநூறுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

பாப்பரசர் எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடுவதில் இருந்து தவிர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.