பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜேர்மனியில் களைகட்டியது கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்கள் உட்பட பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஜேர்மனி மக்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

அந்நாட்டின் டிரெஸ்டென் நகரில் 584 ஆவது ஆண்டாக கிறிஸ்மஸ் சந்தை இயங்கத் தொடங்கியுள்ளது.

விதவிதமான கேக்குகள், இனிப்புகள், பொம்மைகள் என சந்தை முழுவதும் நாலாவித பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மக்களும் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கி உள்ளனர்.

கூட்டம் அதிகரித்துள்ளதால் குறித்த பகுதிக்கு பாதுகாப்பு பொலிஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1434 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கிறிஸ்மஸ் சந்தை ஜேர்மனியின் கலாச்சாரங்களில் ஒன்றாக மாறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !